கொவிட் தொற்றில் நிரம்பும் வைத்தியசாலைகள் – அதிகரிக்கும் ஒக்சிஜனின் தேவை

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவிக்கின்றார்.
அத்துடன், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான ஒக்சிஜனின் தேவையும், படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்கள், ஒக்சிஜன் வழங்க வேண்டிய நோயாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளில், 50 முதல் 60 வீதமான பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஓரிரு வாரங்களில் பெருமளவிலான நோயாளர்கள் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பதிவாக முடியும் என கணிக்க முடிவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவிக்கின்றார்.

Comments
Post a Comment