புட்டினிற்கு இதனை காண்பியுங்கள் - ஆறு வயது சிறுமியின் மரணமும் மருத்துவரின் சீற்றத்துடனான வேதனையும்

 புட்டினிற்கு இதனை காண்பியுங்கள் - ஆறு வயது சிறுமியின் மரணமும் மருத்துவரின் சீற்றத்துடனான வேதனையும்




உக்ரைன் படைவீரர்கள் ரஸ்யர்களின் தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மரியுபோல் நகரில் ரஸ்ய படையினரின் எறிகணை தாக்குதலில் காயமடைந்த ஆறுவயது சிறுமியுடன் அம்புலன்ஸ்  ஒன்று மருத்துவமனையின் முன்னால் வந்து நின்றது.

அந்த சிறுமிவெளிறிய தோற்றத்துடன் காணப்பட்டார்,அவரது பழுப்பு நிற தலைமுடி ரப்பர் பாண்டினால் கட்டப்பட்டடிருந்தது - அவரது ஆடையிலிருந்து குருதி வழிந்தவண்ணமிருந்தது,அந்த ஆடையில் கார்ட்டுன் யுனிகோர்ன்கள் காணப்பட்டன.

மருத்துவ குழுவொன்று அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது,சிறுமியை காப்பாற்றுவதற்கு அவர்கள் போராடினார்கள்.

தாயார் அம்புலன்சிற்கு வெளியேஅழுதபடி காணப்பட்டார்.

அவரை அம்புலன்சிலிருந்து வெளியே எடுங்கள் எங்களால் காப்பாற்ற முடியும் என மருத்துவ பணியாளர் ஒருவர் சத்தமிட்டவாறு அம்புலன்ஸை நோக்கி விரைந்தார்.

சிறுமிவேகமாக உள்ளே கொண்டு சென்றனர் மருத்துவதாதிமார்களும் மருத்துவர்களும் சிறுமியை சுற்றி காணப்பட்டனர்.

ஒருவர் அவருக்கு ஊசி ஏற்றினார்.

இன்னொருவர் அவருக்கு வழங்கி காப்பாற்ற முயன்றார்

மருத்துவதாதியொருவர் அழுதார்.

நீலநிற ஆடையில் காணப்பட்ட சிறுமிக்கு ஒக்சிசனை வழங்கிக்கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சீற்றத்துடன்துயரத்துடன் ஏஎவ்பி செய்தியாளரின் கமராவை நோக்கிதிரும்பினார்.

உயிரிழந்த நிலையில் காணப்பட்ட ஆறுவயது சிறுமியை காண்பித்த அவர் இதனை புட்டினிற்கு காண்பியுங்கள், குழந்தையின் கண்களை அழும் மருத்துவர்களை அவருக்கு காண்பியுங்கள் என்றார்

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !