நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி
நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி
எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிதல் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வௌிநாட்டவர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (27) மதியம் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதுடைய ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Comments
Post a Comment