திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

 

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு



(நூருள் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்)

திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத்தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் கையளித்தார்.

மிக நீண்டதூரம் பயணம் செய்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் இந்த வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக நிலவிவந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சு இந்த அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைத்துள்ளது.

இந்நிகழ்வில் திருக்கோவில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.பி. மஸ்கூத், பொத்துவில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டீ. எஸ்.ஆர்.டீ. ஆர். றஜாப் ஆகியோர் கலந்து கொண்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸிடமிருந்து அம்புலன்ஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !