மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்தில் ஆட்சிசெய்கின்றோம் - டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை – ஜனாதிபதி
மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்தில் ஆட்சிசெய்கின்றோம் - டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை – ஜனாதிபதி
மக்களிற்கு சுதந்திரத்தை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கம் நாட்டை ஆள்கின்ற போதிலும் அந்த சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை உறுதிசெய்யும் தானும் தனது அரசாங்கமும் ஆட்சி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணயநெருக்கடிக்கு நானோ எனது அரசாங்கமோ காரணமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மின்சாரம் இல்லை எரிபொருள் இல்லை என பல முறைப்பாடுகள் காணப்பட்டபோதிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நுரைச்சோலை மின்நிலையத்தை ஏற்படுத்திய பின்னர் அதற்கு பின்னர் ஆட்சிபுரிந்தவர்கள் ஒரு மின்நிலையத்தை கூட ஆரம்பிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தன்னால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசுமை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கொள்கை உறுதிமொழியை வழங்கியதாகவும் எனினும் துரதிஸ்டவசமாக அதனை தான்னால் உரிய விதத்தில் விவசாயிகளிற்கு தெரியப்படு;த்த முடியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படு;த்தி எதிர்கட்சிகள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment