ரஸ்யாவிற்கு எதிரான உலககிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்கு போலந்து மறுப்பு
ரஸ்யாவிற்கு எதிரான உலககிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்கு போலந்து மறுப்பு
ரஸ்யாவிற்கு எதிராக விளையாடுவதற்கு போலந்து மறுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் நடவடிக்கைகக்கு எதிர்ப்பு தெரிவித்தே போலந்து இந்த போட்டியில் விளையாடப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
இதற்கும்மேலும் வார்த்தைகள் இல்லை நடவடிக்கைகளிற்கான தருணம் என போலந்தின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செசரி குலெஸார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக எங்கள் அணி ரஸ்யாவிற்கு எதிரான போட்டியில் விளையாடாது என அவர் தெரிவித்துள்ளார்.
போலந்தின் கால்பந்தாட்ட வீரர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்-இது சரியான முடிவு-உக்ரைனில் ஆயுதஆக்கிரமிப்பு தொடரும் நிலையில் ரஸ்யாவுடன் விளையாடுவதை என்னால் நினைத்துப்பார்க்க முடியாது என ரொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஸ்ய விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் இதற்கு காரணமில்லை ஆனால் ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பது போல இருக்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment