யுக்ரேனிலிருந்து அவசரமாக வெளியேறும் மக்கள்
யுக்ரேனிலிருந்து அவசரமாக வெளியேறும் மக்கள்
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்க ஆரம்பித்த தருணம் முதல் இதுவரையான காலம் வரை 115,000க்கும் அதிகமான மக்கள் போலந்து எல்லை வழியாக நாடு கடந்து சென்றுள்ளார்கள் என போலந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்றுடன் முடிவடைந்த கடந்த நான்கு மணித்தியாலங்களில் மட்டும் 15,000 பேர் நாட்டிற்குள் நுழைந்ததாக உள்துறை அமைச்சர் பாவெ செபர்னேக்கர் கூறியுள்ளார்.
யுக்ரேன் மீது, ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், யுக்ரேனிலிருந்து சுமார் 5 மில்லியன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment