ஏப்-02 இற்கு பின்னர் மின்வெட்டு 4 மணி நேரமாக குறைக்க நடவடிக்கை!

 ஏப்-02 இற்கு பின்னர் மின்வெட்டு 4 மணி நேரமாக குறைக்க நடவடிக்கை!



"ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்."


- இவ்வாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-


”எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் எனக் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.


எனவே, 2ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்குச் சீராகும். மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும்.


எரிபொருள் மற்றும் மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும்" - என்றார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது