மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 124 ஆவது ஜனன தின நிகழ்வுகள்

 

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 124 ஆவது ஜனன தின நிகழ்வுகள்


( சிவம் )

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பொன் செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரின் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பூங்காவில் சிலைக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் ,பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சார்பாக அவரது உத்தியோகபூர்வச் செயலாளர் வி.மதிமேனன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராசிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவர் பிரசன்னா இந்திரக்குமார், மண்முனை மேற்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எஸ்.கேசவன் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மலர் மாலை அணிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்  மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.ராமதாஸ் குருக்கள் மற்றும் இயேசு சபைத் துறவி ஜோசப் மேரி ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை நிகழ்த்தினர்.





Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !