புதுவருட காலப் பகுதியில் 15 மணிநேர மின்வெட்டு?
புதுவருட காலப் பகுதியில் 15 மணிநேர மின்வெட்டு?
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் போதியளவு கிடைக்காமை மற்றும் நீர் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானளவு நீர்த்தேக்கங்களில் நீர் இல்லாமை ஆகிய காரணங்களினால் எதிர்வரும் நாட்களில் 15 மணிநேர மின்சார வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்ஜித் இந்துவர தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் நாட்களின் மின்வெட்டை அமுல்படுத்தும் நேரம் அறிவிக்கப்படுவதை விடவும், மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை அறிவிப்பது மிக இலகுவாக இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
அவ்வாறு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில், மின்வெட்டை குறைப்பதற்கான இயலுமை கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் அல்லது உரிய நீர் கிடைக்காத பட்சத்தில், தமிழ் சிங்கள புதுவருட காலப் பகுதியில் இருளிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்
Comments
Post a Comment