திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி சௌபாக்கியா திட்டத்தில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

 

திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி சௌபாக்கியா திட்டத்தில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு


(அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் திருக்கோவில் 01 கிராமத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது

இந்நிகழ்வானது திருக்கோவில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இவ் வீட்டுத் திட்டமானது சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் வீடற்று வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றுக்கு ஆறு இலட்சம் பெறுமதியான புதிய வீட்டினை நிர்மானித்துக் கொடுக்கப்படவுள்ளது.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்லினை நட்டு வைத்திருந்ததுடன் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் நிஷாந்தி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நேசராசா மற்றும் சமுர்த்தி சங்க நிருவாகிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021