மின்வெட்டு நீடிப்பதால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயற்படுவதில் இடையூறு

 

மின்வெட்டு நீடிப்பதால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயற்படுவதில் இடையூறு


மின்சாரம் துண்டிக்கப்படும் காலங்களில், தொலைத்தொடர்பு கோபுரங்களை இயங்க வைப்பதற்கு தேவையான டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கோபுரங்களை செயற்படுத்துவதற்காக நேற்று(செவ்வாய்கிழமை) மூவாயிரம் லீட்டர் டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு நீடிப்பதால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயற்படுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு தேவையான எரிபொருளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் விநியோகிப்பதற்கு தமது அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !