வெல்லாவெளியில் புதிய பாடசாலை திறப்புவிழா
வெல்லாவெளியில் புதிய பாடசாலை திறப்புவிழா
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான சுரணை ஊற்று பகுதியில் நீண்டகாலமாக குறைபாடாக இருந்துவந்த ஆரம்ப பிரிவு பாடசாலை இன்மை குறைபாட்டினை நீக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் புதிய ஆரம்ப பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத்தின் அங்கீகாரத்தில் இந்த ஆரம்ப பாடசாலை நேற்று(29)ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரவனை யூற்று விநாயகர் வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய ஆரம்ப
பாடசாலையின் அதிபர் எஸ். திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த பாடசாலையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். புள்ள நாயகம், கொக்கட்டிச்சோலை பிதேச சபை உறுப்பினரும் முற்போக்குதமிழர் அமைப்பின் பிரதான இணைப்பாளருமான வை,மோகன் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உதவி தவிசாளர் என்.தர்மலிங்கம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி ஆர் ராகுல நாயகி வெல்லாவெளி கோட்ட கல்வி அதிகாரி ரீ, அருள்ராசா பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிர்வாக பிரதி கல்விப்பணிப்பாளர்.எம். மகேந்திர குமார் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர். இந்ததிறப்புவிழாவைபவத்தின்போதுராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தேசிய மரநடுகை திட்டத்தையும் இங்கு ஆரம்பித்துவைத்தார்.
Comments
Post a Comment