வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி, யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த நபரின் வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார் , அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்த்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Comments
Post a Comment