யாழில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது

 

யாழில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது


கோப்பாய் - யோகபுரம் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் யோகபுரம் பகுதிக்கு சென்றனர்.

அதன் போது அங்கிருந்த சிலர், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார் , இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது