"பரண் இரவு | Paran Night" பிரதேச கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

 "பரண் இரவு | Paran Night" பிரதேச கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

________________________________________________












இறக்காமம் கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் "பரண் இரவு | Paran Night" நிகழ்வானது சிரேஷ்ட கலைஞர்களின் பங்கேற்புடன் பல்வேறுபட்ட கலைப் படைப்புக்களுடன் 

2022.03.29 ஆம் திகதி செவ்வாய் கிழமை மாலை 7.00 மணி தொடக்கம் முழு இரவு நிகழ்ச்சியாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக கலாச்சார அதிகார சபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


கௌரவ அதிதிகளாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். இப்றாலெப்பை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக இறக்காமத்தின் சிரேஷ்ட கலைஞர்களான கெபிடல் FM சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல். ஜபீர்

 இற-மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஜௌபர், இற- GMMS  வித்தியாலய அதிபர் ஏ.ஹாறுடீன், கிராம சேவை உத்தியோகத்தர்களான பீ.எம். அஸீஸ், யூ.எல். யாசின்பாவா, யூ.எல் அமீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


கலாச்சார அதிகார சபையின் பிரதி தலைவர்  எஸ்.எல். நிஸார் (கல்வி பிரதிப் பணிப்பாளர்), பொருளாளர் யூ.எல். ஜிப்ரி (ஆசிரியர்), செயலாளர் ஏ.கே. அஸ்வர் (சிரேஷ்ட அறிவிப்பாளர் - பிறை FM)  ஆகியோரின் நெறியாழ்கையில் "பரண் இரவு | Paran Night" நிகழ்வுகள் இடம்பெற்றன.


பரண் இரவின்  கலை படைப்புக்களாக...


👉 கலைஞர்கள் ஒன்றுகூடல்


👉 பரண் பேசும் கதைகள்


👉 நிலாச் சோறு


👉 பஜனா விருந்து


👉 பரண் பேசும் கதைகள்


👉 ஓரங்க நாடகம்


👉 தீப்பந்து இரவு


👉 பரண் கவிதை


👉 தீப் பந்து விளையாட்டு


👉 சிலம்பாட்டம்


👉 வாள் வீச்சு


👉 பரண் பாடல்


👉 தற்காப்பு கலை


👉 இசை வாத்தியம்


இன்னும் பல சுவாரஷ்யமான நிகழ்ச்சிகள் பரண் இரவு நிகழ்ச்சியில் இடம்பெற்றன.


நிகழ்வுகள் யாவும் சமூக ஊடகமான TopOne TV, எம்TV, Ashraffians Irakkamam என்ற முகநூல் பக்கங்கள் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !