ஜெர்மன் யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட மூவர் கைது...

 ஜெர்மன் யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட மூவர் கைது...



இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இதன்படி துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஜெர்மன் யுவதி, மற்றொரு நபருடன் சுற்றுலா வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இளைஞர் ஒருவர் யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம், அவர்களின் கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அவர்கள் குறித்த இளைஞர்களின் முகங்கள் அடங்கிய காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.


அதனையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர்.


அதற்கமைய கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுற்றுலாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !