மின் கட்டண அதிகரிப்பு விவகாரம்; மின்சக்தி அமைச்சர் விளக்கம்!

 மின் கட்டண அதிகரிப்பு விவகாரம்; மின்சக்தி அமைச்சர் விளக்கம்!



மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டண திருத்தங்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளிப்பதானது, முதல் தடவை அல்ல என்றும், கட்டண திருத்தங்களுக்கான கோரிக்கை 2015 முதல் பலமுறை முன்வைக்கப்பட்டது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இதனை நடைமுறைப்படுத்தவோ, திருத்தவோ அல்லது பிரேரணையை நிராகரிக்கவோ அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதற்கமைய மின்சாரக் கட்டணத்தை திருத்தும் கோரிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !