சூடுபிடிக்கும் போராட்டக் களம்: பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும்

 சூடுபிடிக்கும் போராட்டக் களம்: பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும்

 இடையில் முரண்பாடு 




கொழும்பின் முக்கிய வீதிகளில்  அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 


கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பொலிஸார் கொழும்பின் முக்கிய பல வீதிகளில் வீதித்தடைகளை அமைத்துள்ளனர். 


இதன் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதிக்கருகில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது. 


மேலும்,  காலி முகத்திடல் போராட்டக் களத்தை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து பேரணியாக சென்று கொண்டுள்ளனர். 


அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து  காலி முகத்திடலை நோக்கி  பேரணியாக செல்லும் வழியில்  லோட்டஸ் வீதிக்கருகே போடப்பட்டிருக்கும் வீதித் தடைக்கருகில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 


எனினும் குறித்த பகுதியில் இருந்து போராட்டக் காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மக்கள் விமரிசனம்)

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !