துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நால்வர் கைது

 

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நால்வர் கைது


நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் டி- 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வியாபாரி ஒருவர் கப்பம் கட்டாததால், அவரை படுகொலை செய்ய குழு ஒன்று திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சுற்றவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், வெளிநாடு ஒன்றில் மறைந்திருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32/37/38 மற்றும் 42 வயதுடைய மினுவாங்கொடை மற்றும் கொட்டுகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !