(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூரின் ஆலோசனையின் பிரகாரம் பழைய மாணவர்களுக்காக, பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பவளவிழா கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை நடாத்தவுள்ளது. இப்போட்டிகளில் முதலிடம் பெறும் வெற்றியாளர்களுக்கு பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் சீ.ஓ. லெஸ்தகீர் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். அத்தோடு, முதலிடம் பெறும் ஆக்கங்கள் பவள விழா சிறப்பு மலரிலும் இடம்பெறவுள்ளன. அது மட்டுமல்லாமல் பாடசாலை மீளத்திறக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கிடையேயும் பழைய மாணவர் சங்கத்தினால், பாடசாலையின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளன. திறந்த போட்டிகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு: கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகளாக முதலாமிடம் - 10,000 ரூபாய், இரண்டாமிடம் - 5,000 ரூபாய், மூன்றாமிடம்- 3,000 ரூபாய், ஆக்கங்கள் தரமானதாக அமையுமிடத்து பெறுமதிமிக்க மூன்று ஆறுதல் பரிசில்கள் வழங்கப்படும். பொது நிபந்தனைகள்: போட்...
Comments
Post a Comment