தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வார விடுமுறை!
தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வார விடுமுறை!
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கடந்த வாரம் பொலிஸ் மா அதிபருக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார்.
விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment