அட்டுலுகம சிறுமி மரணம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!
அட்டுலுகம சிறுமி மரணம் தொடர்பில்
மேலும் ஒருவர் கைது!
அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியை கொலை செய்த நபர் போதைக்கு அடிமையானவர் மற்றும் சிறுமியின் தந்தையுடன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 28 வயதுடைய இளைஞன் சிறுமியை துன்புறுத்துவதற்காக சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், அவர் சிறுமியை அடிக்கத் தொடங்கியதால் சேற்றில் முகத்தைப் பிடித்துக் கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட பகுப்பாய்வு சந்தேகிக்கப்படுகிறது.
சிறுமியைக் கொன்ற நபர், சிறுமியைக் கண்டுபிடிக்க கிராம மக்களுடன் தானும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
Comments
Post a Comment