சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை - குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

 Update..

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை - குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!



பண்டாரகமை - அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளது.


களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !