சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

 சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!






சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் பண்டாரகமை பொலிஸார் முதற்கட்ட அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.


சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


பாணந்துறை நீதவான் நீதிமன்றில் காவல்துறை முன்வைத்த சமர்பணங்களை ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.


இதற்கமைய, சிறுமியின் சடலத்துக்கான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகிறது.


இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சிறுமி பாத்தீமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5 காவல்துறை குழுக்கள் பல்வேறுப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !