ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜப்பானில் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளமையினால் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. அதன்படி, கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ஜப்பான் நீக்கியுள்ளது.


அடுத்த மாதம் 10-ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டப்பட்ட விதிமுறைகளின்படி சுற்றுலா பயணிகளின் அனுமதி வழங்குவதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலும், ஒகினாவாவில் உள்ள நஹா விமான நிலையத்திலும் சர்வதேச விமானங்கள் ஜூன் மாதம் முதல் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் படிப்படியாக சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !