அக்கரைப்பற்றில் 20 இலட்சத்து 40ஆயிரம் பணமும் 13 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது
அக்கரைப்பற்றில் 20 இலட்சத்து 40ஆயிரம் பணமும் 13 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 20 இலட்சத்து 40 ஆயிரம் பணமும் 13 பவுண் நகைகள் உட்பட இரண்டு கையடக்கதொலை பேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வியாபார நிலையங்களை நடத்திவரும் தந்தை மற்றும் மகன் வசித்து வரும் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்டவர்கள் உறக்கத்திலிருந்த சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை இரண்டு மணியளவில் மனைவியின் கூக்குரல் கேட்டு எழுந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்த நகைகள் வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணம் உட்பட கைத்தொலைபேசி உள்ளிட்டவையும் கொள்ளையிடப்பட்டதையும் தெரிந்துகொண்டார்.
வீட்டின் உரிமையாளர் பதிவு செய்தமுறைப்பாட்டினை அடிப்படையாக வைத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment