மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின!

 

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின!



மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாயினை முன்மொழிந்திருந்தது.

அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் கட்டணத்தை 2 ரூபா 50 சதங்களாலும் அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட நிலையான கட்டணத்தை ஆயிரத்து 100 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை 300 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், தற்போது 4 ரூபா 85 சதமாக உள்ள 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் கட்டணத்தை 12 ரூபா 50 சதங்களால் அதிகரிக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ள போதிலும், 10 ரூபாய் கட்டண திருத்தத்தை மாத்திரமே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !