வாழைச்சேனையிலிருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட இயந்திரப்படகு கைப்பற்றல்.
வாழைச்சேனையிலிருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட இயந்திரப்படகு கைப்பற்றல்.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட இயந்திரப்படகு 54 பேருடன் மட்டக்களப்பு, பாலமீன்மடு கடலில் வைத்து
இன்று அதிகாலை
கைது செய்யப்பட்டுள்ளது
இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இயந்திரப்படகு மற்றும் அதிலிருந்து நீண்ட நாட்களுக்கு தேவையான அத்தியவசியப்பொருட்களும்
கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான 54 பேரையும் இயந்திரப்படகையும் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Post a Comment