பதவியை துறக்க தயார் – சஜித்திற்கு பகிரங்க சவால் விடுத்தார் ஹரின்!
பதவியை துறக்க தயார் – சஜித்திற்கு பகிரங்க சவால் விடுத்தார் ஹரின்!
மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.
நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments
Post a Comment