கோயிலுக்கு சென்று திரும்பிய வயோதிபபெண் யானையின் தாக்குதலில் பலி

 

கோயிலுக்கு சென்று திரும்பிய வயோதிபபெண் யானையின் தாக்குதலில் பலி



(மண்டூர் ஷமி)

 கரடியனாறு  பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் குடாவெட்டை பகுதியில் நேற்று முன்தினம் யானையின தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபபெண் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

ஈரளக்குளம் குடாவெட்டை பிரதேசத்தைச்சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான (62) குஞ்சித்தம்பி தேவராணி என்பவரே இந்த தாக்குதலில் அகப்பட்டு மரணமானவர்ராவார்.

சம்பவ தினத்தன்று மாலை வேளையில் தனது வீட்டிலிருந்து வழிபாட்டிற்காக ஈரளக்குளம் சிவன்கோயிலுக்கு சென்று காலையில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது பனைமரங்கள் நிறைந்த காட்டுக்குள் மறைந்திருநந்த யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் பிரதேச வாசிகளின் உதவியுடன் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கரடியநாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார்.மேலதிக விசாரணைகளை கரடியநாறு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !