Qatar Charity நிறுவனம் மீதான தடை நீக்கப்படவுள்ளது
Qatar Charity நிறுவனம் மீதான தடை நீக்கப்படவுள்ளது
கட்டாருக்கு விஜயம் செய்துள்ள மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டும் Qatar Charity நிறுவன பிரதிநிதிகளை நேற்று (29) சந்தித்துள்ளனர்.
Qatar Charity நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
Qatar Charity என்பது கட்டார் அரசாங்கத்தின் முக்கிய தொண்டு நிறுவனமாகும்.
குறித்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, 2019 ஆம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது.
தற்போது Qatar Charity மீதான தடையை நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment