ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது !

 

  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது !



மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த நிலையில் குறித்த நபர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியைத் திருடியுள்ளார்.

குறித்த நபர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளிகளையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சி.சி.டி.வி. காணொளிகளை மையப்படுத்தி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கைதான சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !