எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு

 

எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு !



தேசிய எரிபொருள் விநியோக அட்டை QR முறை ஊடாக இதுவரை சுமார் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நாளைய தினம் முதல் QR முறை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான  முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு நாளை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021