ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் விடுதலை பெறுவார் என நம்புகின்றேன் - சஜித் பிரேமதாச !

 

ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் விடுதலை பெறுவார் என நம்புகின்றேன் - சஜித் பிரேமதாச !



மனிதாபிமானம் மிக்க அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்க வெகுவிரைவில் முழுமையான விடுதலை பெறுவார் என்று தான் நம்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெகுவிரைவில் தனக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்ற சாதகமான எதிர்பார்ப்புடன் ரஞ்சன் ராமநாயக்க காத்திருக்கின்றார். அவருக்கு முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும் என்பதே, என்னுடையதும் முழு இலங்கை மக்களதும் எதிர்பார்ப்பாகும். இதற்காக நாம் பிரார்த்திற்கின்றோம். எமது பிரார்த்தைக்கு ஏற்ப நீண்ட நாட்கள் அன்றி , மிக விரைவில் அவருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்.

நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க முழுமையான விடுதலை கிடைக்கும் எதிர்பார்பார்ப்பதோடு, அந்நாள் வரும் வரை காத்திருக்கின்றோம். அவர் ஓர் உண்மையான மனிதாபிமானி என்பதோடு ஒரு மக்கள் சார் கலைஞராகவும் மகத்தான பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதியும், மக்கள் சார் கலைஞராகவும் தொடர்ந்து மக்கள் செல்வாக்குள்ள பிரபலம் மிக்க ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திரமான பிரஜையாக சமூகத்திற்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காக பாடுபடுவதை பார்க்க வேண்டும் என்பதே எமது ஒரேயொரு நோக்கமாகும் என தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021