என்னை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது - ஹிருணிகா பிரேமச்சந்திர !

தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் அடக்குமுறையை ஆரம்பித்ததாகக் கூறும் ஹிருணிகா பிரேமச்சந்திர, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கைதுசெய்யப்படும் அச்சம் இருப்பதாக நினைத்தால், தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக தம்மைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க அடக்குமுறையை முன்னெடுத்தாலும், இந்த வருட இறுதிக்குள் அனைத்தும் முடிவுக்கு வரும் என கூறும் ஹிருணிகா, வன்முறையில் ஈடுபடவேண்டாம் என அனைத்துப் போராட்டக்காரர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments
Post a Comment