சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்துள்ளது இலங்கை !
சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்துள்ளது இலங்கை !

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் கடந்த கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் ஏப்பிரல் மாதம் ஆரம்பமாகியிருந்தன.
இலங்கை அரசாங்கம் 1948 இன் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அவசியமான ஈஎவ்எவ் உதவியை பெற முயல்கின்றது - இதனை பெறுவதற்கு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டிய நிபந்தனையை அரசாங்கம் எதிர்கொள்கின்றது.
பலமாதகாலமாகநீடிக்கும் மருந்து உணவு எரிபொருட்களிற்கான தட்டுப்பாட்டின் காரணமாக உருவான மக்கள் எழுச்சியால் ஜனாதிபதி ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்த விக்கிரமசிங்க கடன் மறுசீரமைப்பில் ஈடுபட எண்ணியுள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் பெரும்வெற்றிகரமானவையாக காணப்படுகின்றன கடன்வழங்கியவர்களுடன் கருத்தொருமைப்பாட்டு உடன்படிக்கைக்கு வருவதற்கு இலங்கை ஆலோசகர்களுடன் இணைந்து நடவடிக்கயில் ஈடுபட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது,
Comments
Post a Comment