பாணின் விலையை 60 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் !

 

பாணின் விலையை 60 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் !



நாளாந்தம் அதிகரித்து வரும் கோதுமை மாவின் விலையை மூன்று நாட்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், ஒரு இறாத்தல் பாணின் விலை 60 ரூபாவினாலும், பனிஸ், கறி பனிஸ் போன்ற சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக சந்தையில் மாவின் விநியோகம் பாதியளவு குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார் தற்போது கோதுமை மா கிலோ ஒன்று 350 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தையில் மாவிற்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலையில் மாவை வாங்கி பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பட்சத்தில் தற்போது 190 ரூபாவாக உள்ள பாண் இறாத்தல் ஒன்றின் விலை 250 ரூபாவாக உயரும் எனவும், பனிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாய் வரை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !