மட்டக்களப் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக டீசலை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் விவசாய அமைச்சருடன் பேச்சுவார்த்தை!

 

மட்டக்களப் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக டீசலை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் விவசாய அமைச்சருடன் பேச்சுவார்த்தை!


(மட்டக்களப்பு விசேட நிருபர்)
மட்டக்களப் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் விவசாய அமைச்சரை நேற்று முன்தினம் (23) திகதி சந்தித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் கலந்துரையாடப்பட்டதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் முந்தி பயிற்செய்கை பண்னும் மாவட்டமாக இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் டீசலை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், விவசாயிகளுக்கு இலவசமாக டீசலை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்திவருவதாகவும் அமைச்சர் இதன்போது விவசாயிகளுக்கு வாக்குறுதியளித்ததாக கலந்து கொண்ட விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !