பிரதமராக கோட்டா! தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர் ஆளும்கட்சியினர் !

 

பிரதமராக கோட்டா! தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர் ஆளும்கட்சியினர் !


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க விருப்பமா என வினவினார். அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே,

எங்களுக்கு விருப்பம் தான். கண்டிப்பாக வாக்களிப்போம்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கையில் கோட்டாபய ராஜபக்ச விரைவில் இந்த நாட்டுக்கு வரவேண்டும். அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. அப்படியானால் அவர் பிரதமர் ஆவதை யாருக்கு தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் இல்லை, அவர் கேட்டால் அவருக்கு வாக்களிப்போம் என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !