வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் ! - செங்கலடியில் போராட்டம்

 

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் ! - செங்கலடியில் போராட்டம்


(ரூத் ருத்ரா)
'இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' என்ற தொணிப் பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு தன்னாமுனை வீதி செங்கலடியில் இன்று (30) நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல் முனைவு போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் 30 ஆவது நாள் செயல் முனைவான போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஒன்று கூடிய மக்கள் தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறுபட்ட பிரச்சினைள் தொடர்பாக கோஷங்களை எழுப்பியவாறும் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் மேலும் ;

பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு வருமாறு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
'நடமாடுவது எங்கள் சுதந்திரம் ஒன்று கூடுவது எங்கள சுதந்திரம் ';, 'பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை', 'வேண்டும் வேண்டும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்' என்பன போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிவில் அமைப்புக்கள் இளைஞர் யுவதிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !