10% தள்ளுபடியுடன் டொலர்களுக்கு விற்கப்படும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகள் !
10% தள்ளுபடியுடன் டொலர்களுக்கு விற்கப்படும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகள் !
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு டொலர் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறு பெற்றுக்கொண்டால் 10% தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் 40,000 டொலர்களை செலுத்தி குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார் என நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் வியாட்புர வீடமைப்புத் தொகுதியில் 02 படுக்கையறைகள் கொண்ட வீடொன்றை இன்று கொள்வனவு செய்து அதன் பெறுமதி 158 இலட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டை டொலர்களில் கொள்வனவு செய்யும் போது 10% தள்ளுபடி வழங்கியதன் அடிப்படையில் 142 இலட்சம் ரூபாயிற்கு குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார்.
Comments
Post a Comment