எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயார் என அறிவித்தது லங்கா ஐ.ஓ.சி!

 

எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயார் என அறிவித்தது லங்கா ஐ.ஓ.சி!

 


எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான தீர்மானம் வலுசக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் உள்ளூர் சந்தையில் அதனை நேரடியாக பிரதிபலிக்க முடியாது.

மேலும், தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் கடந்த காலங்களில் அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டன.

வெளிநாட்டு நாணய நெருக்கடி எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக நாணய கடிதங்களை விடுவிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுத்ததாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !