புகையிரத சாரதி உறங்கியமையினால் தண்டவாளத்தை விட்டு விலகி கட்டடத்திற்குள் புகுந்த ரயில் !
புகையிரத சாரதி உறங்கியமையினால் தண்டவாளத்தை விட்டு விலகி கட்டடத்திற்குள் புகுந்த ரயில் !
.png)
தெமட்டகொடவில் புகையிரம் ஒன்று கட்டிடம் ஒன்றின் மீது மோதிய சம்பவம் பதிவாகியுள்ளது. தெமட்டகொட புகையிரத தளத்தில் பயணித்த குறித்த புகையிரதம் அங்கிருந்த பழைய கட்டிடம் ஒன்றின் மீது மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
புகையிரத சாரதி உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து புகையிரத திணைக்களத்தின் ஊடாக உள்ளக விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment