சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மற்றும் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வு.

 

சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மற்றும் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வு.


கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு  சார்ள்ஸ் மண்டபத்தில் மட்டக்களப்பு எகட் கரிடாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாஸன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. 

இங்கு தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு 30 இலட்சம் ருபா நிதி பகிரப்பட்டது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிதீயுதவியினை வழங்கி வைத்தார். 

இந் நிதியுதவியானது குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கத்தோலிக்க மக்கள் போப் பிரான்ஸிஸ் ஆண்டகை அவர்களை சந்தித்ததன் நிமித்தம் பதிக்கப்பட்ட  இலங்கை மக்களுக்கான நிதியுதவியை அவர் அண்மையில் வழங்கி வைத்தார். அவரின் வேண்டுகளின் பேரில் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று வழங்குவதன் ஒரு கட்டமாக இன்று இந்நிதியுதவி மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரின் இலங்கை பிரதிநிதி அருட்தந்தை நெல்சன் அவர்களின் மேற்பார்வையில் இந்நிதியுதவி வழங்கப்பட்டது.

 இந்நிகழ்விற்கு எகட் கரிடாஸின் கொழும்பு கிளை இயக்குனர் லோரன்ஸ் ராமநாயக்க மற்றும் சியோன் தேவாலய பிரதம போதகரின் மனைவி திருமதி ரொசான் மகேசன் மற்றும் சியோன் தேவாலய போதகர் திருகுமரன் மற்றும் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் , மட்டு மாவட்ட எகட் கரிடாஸின் உறுப்பினர்கள் எனப்பலர் இந்நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !