கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் ஆதரவு
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் ஆதரவு

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு யோசனைக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் தங்களது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆயுர்வேத மருத்துவர்கள் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கும் யோசனை ஆதரித்ததுடன் ஏற்றுமதிக்கான கஞ்சா சாகுபடியை மருத்துவ மூலிகையாக ஊக்குவிக்க வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கஞ்சா சாகுபடிக்கான தடையை நீக்குவதற்கான அரசின் முன்மொழிவை பாராட்டிய அவர்கள், அதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
Comments
Post a Comment