முல்லைத்தீவில் பொலிஸார் அட்டகாசம்!

 முல்லைத்தீவில் பொலிஸார் அட்டகாசம்!

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு மக்கள் நின்றவேளை அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நுழைவாயில் வளைவு மற்றும் கொடிகள் என்பனவற்றை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து ஏற்பாடுகளை செய்தவர்களை சுடுவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர். மேலும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றிச் சென்றுள்ளனர்.

அத்தோடு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு நேற்றிரவு சென்ற பொலிஸார் வாயிலில் கட்டியிருந்த பதாதைகளைக் கழட்டிச் சென்றுள்ளதோடு எற்பாடுகளைச் செய்தவர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்வோம் எனவும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் மற்றும் முல்லைத்தீவு நகர கடற்கரை துயிலும் இல்லங்களுக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் நினைவு நிகழ்வில் மாவீரர் நாள் என எழுதிய பதாதையோ, நினைவு வளைவோ அல்லது பாடல்களோ ஒலிபரப்பினால் கைது செய்வோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !