சிற்றுண்டிகள் விலை குறைப்பு !

 

சிற்றுண்டிகள் விலை குறைப்பு !


சிற்றுண்டி வகைகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தையில் கோதுமை மாவின் விலை 28 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !