ஈஸ்டர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஷேக் இந்திய புலனாய்வு பிரிவினரால் கைது
ஈஸ்டர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஷேக் இந்திய புலனாய்வு பிரிவினரால் கைது

ஈஸ்டர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தமிழக ஏஜென்டு ஷேக் ஹிதாயத்துல்லாஇ இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டார்.
4 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டார். இதனை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு சஹாரான் ஹாஷிமுக்கு ஆலோசனை வழங்கியவர் இவர் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பதுங்கியிருந்த ஹிதாயத்துல்லாவுடன், அவரது தூதுவர் சன்யோர் கூலியும் பிடிபட்டார்.
பேஸ்புக் தளம் மூலம் ஈஸ்டர் தாக்குதலை நடத்துமாறு சஹாரான் ஹாஷிமுக்கு ஹிதாயத்துல்லா உத்தரவிட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் ஐந்து ஐஎஸ் பயங்கரவாத அலுவலகங்கள் இருப்பதையும் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
Comments
Post a Comment