இந்த வருடத்தின் இலஞ்ச குற்றச்சாட்டுக்களில் கல்வித்துறை முன்னணியில் !

 

இந்த வருடத்தின் இலஞ்ச குற்றச்சாட்டுக்களில் கல்வித்துறை முன்னணியில் !


இந்த வருடத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக அதிகளவான இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலைகள், கல்வி அமைச்சு மற்றும் பிராந்திய அலுவலகங்களில் இருந்து 212 அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . இதேவேளை கல்வித்துறைக்கு அடுத்தபடியாக இலஞ்சப் புகார்கள் அதிகளவில் பொலிஸ் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. அந்த அதிகாரிகள் மீதான புகார்களின் எண்ணிக்கை 161 ஆகும்.

இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளில் மூன்றாவது இடத்தில் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு எதிராக பதிவு இடம்பெற்றுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் 1945 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்தக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட அரச அதிகாரிகளின் எண்ணிக்கை இருபத்தி ஆறு. இதேவேளை, பொருளாதார பணவீக்க நிலைமை காரணமாக இலஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !